
விண்வெளியில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை மட்டுமே வைத்து மின்சாரத்தை உற்பத்திச் செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை- மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு!
ஜனவரி 01- ஆம் தேதி அன்று பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட் மூலம் FCPS மின்கலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த மின்கலனில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மட்டுமே கொண்டு மிக எளிதில் மின்சார உற்பத்திச் செய்யப்பட்டுள்ளது.
350 கிலோ மீட்டர் உயரத்தில் மின்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது. சோதனைக்காக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 180 வாட் மின்சாரம் உற்பத்திச் செய்யப்பட்டது. இதன் மூலம் மிகக் குறைந்த விலையில் மின்சாரத்தை விண்வெளியில் உருவாக்க முடியும் என்றும் கருதப்படுகிறது.
இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு….. மீனவர்களுக்கு எச்சரிக்கை!
இது வரும் காலங்களில் விண்வெளித் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.