பங்குச்சந்தையில் சரிவு – உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் முடிந்த பின்பு நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. அந்த கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் பங்குச்சந்தையின் புள்ளிகள் உயர தொடங்கியது.
ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணும் போது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே போன்று இந்தியா கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.
இந்த சரிவினால் சுமார் 30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனை முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்திருந்தார்.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட திடீர் உயர்வு, சரிவு பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கறிஞர் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் கருத்துக்கணிப்பு வெளியான நிலையில் கிடுகிடு என உயர்ந்த பங்குச்சந்தை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் சரிவை சந்தித்தது.
பங்குச்சந்தியில் உயர்வை எட்டவே கருத்துக்கணிப்பு திட்டமிட்டு வெளியிடப்பட்டதா என்றும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பங்குச்சந்தை சரிவு காரணமாக ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூபாய் 30 லட்சம் கோடி இழப்பை சந்திக்க நேர்ந்ததாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.