Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

-

- Advertisement -

விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்திற்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்தின் போது மர்ம நபர்கள் வீசிய கற்களால் இரண்டு கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.

we-r-hiring

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி, சங்கராந்தியை முன்னிட்டு டில்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். மேலும், செகந்திராபாத் ரயில் நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகளும் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் சென்னையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கொண்டு வரப்பட்ட வந்தே பாரத் ரயில் சோதனை முறையில் விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்திற்கு இயக்கப்பட்டது. சோதனை ஓட்டம் முடிந்து விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து மர்ரிபாலத்தில் உள்ள பராமரிப்பு மையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்த போது, ​​அடையாளம் தெரியாத நபர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இச்சம்பவம் குறித்து டிஆர்எம் அனூப் கூறுகையில்,  மாலை 6:30 மணியளவில் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆர்.பி.எப். போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர். சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளின் அடிப்படையில் சில சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர் என்றார்.

MUST READ