spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"தமிழகத்தில் ஆளுநர் மூலம் மத மோதலை உருவாக்க முயற்சி"- கபில் சிபல் எம்.பி. குற்றச்சாட்டு!

“தமிழகத்தில் ஆளுநர் மூலம் மத மோதலை உருவாக்க முயற்சி”- கபில் சிபல் எம்.பி. குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் ஆளுநர் மூலம் மத மோதலை உருவாக்க முயற்சி"- கபில் சிபல் எம்.பி. குற்றச்சாட்டு!
Photo: ANI

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் மத ரீதியிலான மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருவதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

we-r-hiring

விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் – தலைவர் வெங்கடேசன்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைந்து, தற்போது மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வருபவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் எம்.பி., ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.

அப்போது, சனாதனம் சர்ச்சைத் தொடர்பான ஏ.என்.ஐ. செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கபில் சிபல் எம்.பி., “தமிழகத்தில் மத மோதல்களை ஏற்படுத்தவே ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. அனுப்பியுள்ளது. மத ரீதியிலான மோதல்கள் தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்ததில்லை.

விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்-சா.மு நாசர் பங்கேற்பு

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் மத ரீதியான மோதல்களை உருவாக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன செய்கிறார் என்பது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றாகத் தெரியும். பா.ஜ.க.வின் அரசியல் திட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னெடுத்துச் செல்கிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ