spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு

பஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு

-

- Advertisement -

தெலங்கானாவில் பஸ்சை ஓட்டி கொண்டே தனது அருகில் வைத்த பயணியின் பையை திறந்து தங்க நகையை திருடிய டிரைவர்

பஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு

we-r-hiring

சக பயணி வீடியோ எடுத்ததால் கையும் களவுமாக பிடிப்பட்ட ஆர்.டி.சி. டிரைவர்   தெலங்கானா மாநிலம் வாரங்கலில் இருந்து நிஜாமாபாத் நோக்கி ஆர்டிசி பேருந்து  சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால்  பெண் பயணி ஒருவர் தனது பையை பாதுகாப்பாக இருக்கும் என டிரைவர் சீட்டிற்கு அருகில் வைத்தார். தனது அருகில் இருக்கும் பையில் அந்த பயணி தங்க நகை வைப்பதை பஸ்ஸை ஓட்டி கொண்டே கவனித்த  டிரைவர்  . சிறிது தூரம் சென்றதும் யாரும் கவனிக்கவில்லை என்று ஒரு கையில் பஸ் ஓட்டி கொண்டே தனது சீட்டின் அருகில் வைத்திருந்த  பெண் பயணியின் பையை திறந்து அதில் வைத்திருந்த தங்க நகை பாக்சை எடுத்து பாக்கெட்டில் வைத்து கொண்டார். ஆனால் சக பயணி ஒருவர் இந்த சம்பவம் முழுவதையும் தனது செல்போனில் பதிவு செய்தார்.

பஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு பஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு

பின்னர் டிரைவரிடம் நகையை கேட்டபோது தன்னிடம் இல்லை என்றார். பின்னர் கீழே விழுந்து இருந்தது அதை எடுத்து வைத்து கொண்டதாக கூறினார். ஆனால் பையில் இருந்து எடுக்கும் வீடியோ இருப்பதாக கூறிய பின்னர் ஆம் தவறாக எடுத்து விட்டேன் மன்னிக்கும்படி கூறினார். அதற்குள் பயணிகள் அவசர போலீஸ் எண் 100 க்கு போன் செய்ததால் அங்கு வந்த போலீசார் அவரை விசாரித்து நகையை மீட்டு பயணியிடம் வழங்கினர். இதனால் கையும் களவுமாக டிரைவர் சிக்கி இருந்தாலும் பயணிக்கு நகை கிடைத்ததால் புகார் வேண்டாம் எனக்கூறினார். இருப்பினுன் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு

பயணிகளை பாதுகாப்பாக அவரவர்  இருப்பிடத்திற்கு அழைத்து செல்லக்கூடிய டிரைவர் பயணிகளின் உயிர் மட்டுமல்லாமல் உடைமைகளுக்கும் பாதுகாவலராக இருப்பது வழக்கம். பஸ் பயணிகள் தவறி விட்டு செல்லும் பொருள்களை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைத்து மீண்டும் பயணிக்கு சேரும் விதமாக பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் இந்த பஸ் டிரைவரோ பயணியின் நகைகளை திருடி பிடிப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

என்னுடைய மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்.. விடாதீர்கள் – நிதி நிறுவனம் ஊழியர் தற்கொலை

MUST READ