Homeசெய்திகள்இந்தியாநாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி - சி 56 ராக்கெட்

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி – சி 56 ராக்கெட்

-

- Advertisement -

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி – சி 56 ராக்கெட்

சிங்கப்பூர் நாட்டின் ஏழு செயற்கைக்கோள்களில் அரியலூர் ஐயப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் செல்லதுரை வடிவமைத்த மூன்று நானோ செயற்கை கோள்களும் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

நாளை காலை 6. 30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தின் முதல் தளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி – சி 56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி - சி 56 ராக்கெட்

இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டின் டி எஸ் டி ஏ எஸ் டி இன்ஜினியரிங் நிறுவனத்தின் தயாரிப்பான 352 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளையும்,  என் டி யு சிங்கப்பூர் உள்ளிட்ட நிறுவனங்களைச் சார்ந்த ஆறு நானோ செயற்கைக்கோள்களையும் புவி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த உள்ளது.

பி.எஸ்.எல்.வி – சி 56 ராக்கெட் 44. 4 மீட்டர் உயரமும் 228.64 டன் உந்து விசை எடையும் கொண்ட ராக்கெட் ஆகும். நான்கு  நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி ராக்கெட் பூமியிலிருந்து 535 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவி தாழ்வட்ட பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவுள்ளது. பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட் பொறுத்த வரை நாளைய பயணம் அதன் 58வது விண்வெளி பயணமாகும்.

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி - சி 56 ராக்கெட்

இதில் சிங்கப்பூரில் உள்ள என்.டி.யு பல்கலைக்கழகத்தின் சார்பில் அனுப்பப்படும் ஏர்காப்ஸ், வேலாக்ஸ் – ஏ. எம், ஸ்கூப் – 2 ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை அரியலூர் ஐயப்பன் நாயக்கன் பட்டியை சேர்ந்த  சண்முகம் சுந்தரம் செல்லதுரை வடிவமைத்துள்ளார்.

இவர் சென்னை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். மேலும், செயற்கைக்கோள்களின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் தற்போது சிங்கப்பூர் என்.டி.யு. பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

MUST READ