
திகார் சிறையில் உள்ள டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வாரம் இருமுறை தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“தேர்தலுக்காக கச்சத்தீவை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை எண் 2- ல் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விசாரணை கைதிக்கான பதிவேடு எண் 670 வழங்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ள சிறை அறைக்கு வெளியே பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வீட்டில் சமைத்த உணவு மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுத்துச் செல்லவும் நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவைக் கண்காணிக்கும் கருவி, குளுக்கோ மீட்டர் மற்றும் சில மிட்டாய்களையும் அவர் வைத்துள்ளார்.
குறைந்த இட வசதியே இருந்த போதும், கெஜ்ரிவால் தனது சொந்த படுக்கையே பயன்படுத்தி வருகிறார். நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, மேஜை, நாற்காலி மற்றும் 3 புத்தகங்கள் வைத்துக் கொள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வாரத்தில் இரண்டு முறை தனது குடும்பத்தினரைச் சந்திக்க கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தொலைக்காட்சியில் செய்தி, விளையாட்டு என 20 சேனல்கள் வரை பார்க்கவும் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.