உத்தரபிரதேசத்தில் உயர் அழுத்த மின் கம்பியின் மீது பஸ் உரசி தீப்பிடித்ததில் 10 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் மாவ் மாவட்டத்தின் கிரியா கஜா கிராமத்தை சேர்ந்த சுமார் 50 பேர் காசிப்பூர் மாவட்டத்தின் மார்டாவில் நடந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக பஸ் ஒன்றில் சென்றுள்ளனர். இந்த பேருந்தானது மார்டா அருகே சென்ற போது சாலையின் மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் திடீரென உரசியது .இதில் பஸ்ஸில் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது. எதிர்பாராத இந்த சம்பவத்தில் பஸ்ஸில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது? என்று சுதாரிப்பதற்குள் பஸ் முழுவதும் தீ மளமளவென எரிந்தது. இதில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் சிக்கி அலறினர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கே கூடினர். மேலும் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்குன் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர்பஸ்ஸில் பிடித்த தீயை போராடி அணைத்துள்ளனர். இந்த பயங்கர சம்பத்தில் பஸ்ஸில் இருந்த 10 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும் மேலும் ரூ.5லட்சம் இழப்பீடும் அறிவித்தார். திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் தீப்பிடித்து 10 பேர் பலியான சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.