Homeசெய்திகள்இந்தியா"விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்"- இஸ்ரோ அதிரடி அறிவிப்பு!

“விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்”- இஸ்ரோ அதிரடி அறிவிப்பு!

-

 

நிலவின் புதிய படங்கள் வெளியீடு!
Photo: ISRO

விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அதிரடியாக அறிவித்துள்ளது.

சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம்…. பிறந்த நாளில் வெளியான கான்செப்ட் போஸ்டர்!

இது தொடர்பாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் என்றழைக்கப்படும் ‘இஸ்ரோ’வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நிலவில் விக்ரம் லேண்டரைத் தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. நாளை (ஆகஸ்ட் 23) தரையிறங்குவதற்கு ஏதுவாக, நிலவுக்கு மிக அருகில் சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சென்றுள்ளது. சந்திரயான்- 3 விண்கலத்தின் செயல்பாடும் திருப்திகரமாக உள்ளது. எனவே, திட்டமிட்டப்படி நாளை (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணியளவில் நிலவின் தென்துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

அத்துடன், ஆகஸ்ட் 19- ஆம் தேதி நிலவின் மேற்பரப்பை 70 கி.மீ. தொலைவில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்துள்ள புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. லேண்டரில் உள்ள நான்காவது கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

MUST READ