
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதியில் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!
பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவுப் பிறப்பித்திருந்தது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருப்பதால், வயநாடு தொகுதிக்கு தேர்தலை நடத்துவதற்கான பணிகளைத் தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து மாதிரி வாக்குப்பதிவை நடத்த மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“அனுமதியின்றி பேனர் வைத்தால் மூன்று ஆண்டுகள் சிறை”- தமிழக அரசு எச்சரிக்கை!
2024- ஆம் ஆண்டு ஏப்ரல் (அல்லது) மே மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வயநாடு தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.