spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த ராகுல் காந்தி!

வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த ராகுல் காந்தி!

-

- Advertisement -

 

வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த ராகுல் காந்தி!

we-r-hiring

இரண்டாவது முறையாக வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, இரண்டாவது முறையாக மீண்டும் கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி, ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் புடைச்சூழ, வாகனத்தில் கையசைத்தப்படி பேரணியாக வந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், இந்த வாகன பேரணியில் ராகுல் காந்தியுடன் உடனிருந்தார்

பின்னர் மாவட்டத் தேர்தல் அலுவலரைச் சந்தித்து தனது வேட்பு மனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, வயநாடு மக்களவைத் தொகுதியில் ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனிராஜா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியில், ஒரு தொகுதியில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுவதால், காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

MUST READ