spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை கேள்வி எழுப்புவோம் - ராகுல் காந்தி

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை கேள்வி எழுப்புவோம் – ராகுல் காந்தி

-

- Advertisement -

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இறுதி நாளான இன்று ராகுல் காந்தி கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ‘பாரத் ஜோடோ யாத்திரை’ குறித்து பேசினார். மேலும் அவர் பேசியதாவது, “எங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் லட்சக்கணக்கான மக்கள் இணைந்திருப்பதாகவும், அனைவரின் வலியையும் கட்டிப்பிடித்து உணர்ந்தோம். பாரத் ஜோடோ யாத்திரையின் போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை என் தேசத்திற்காக நடந்தேன். விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளையும் கேட்டறிந்து அவர்களின் வலியை உணர்ந்தேன்.பாரத் ஜோடோ யாத்ரா மூலம் காஷ்மீர் இளைஞர்களுக்கு மூவர்ணக் கொடியின் மீது அன்பை ஏற்படுத்தினோம். அதை பாஜக பறித்தது.” என்றார்.

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை கேள்வி எழுப்புவோம் - ராகுல் காந்தி
அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை கேள்வி எழுப்புவோம் – ராகுல் காந்தி

மேலும், சீனாவைப் பற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய ‘சீனா பொருளாதாரம் நம்மைவிடப் பெரியது. அவர்களை எப்படி எதிர்த்துப் போராடுவது’ கருத்துக்களைக் குறிப்பிட்டு, அமைச்சர் சொல்வது தேசியவாதம் அல்ல, கோழைத்தனம் என்றார். அத்துடன் நாடாளுமன்றத்தில் அதானி குறித்து உண்மை வெளிவரும் வரை தொடர்ந்து கேள்விகள் கேட்போம். கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவும், கட்சி தொண்டர்களிடம் உரையாற்றிபோது, கட்சியில் புதிய தீர்மானங்களை கொண்டு வருவது நல்லது என்றார். ஆனால் இவை களத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றுக்கூறினார். தொடர்ந்து பேசிய ராகுல்,“52 வருடங்களாக எனக்கு வீடு இல்லை, இன்று வரை எனக்கு வீடு இல்லை. எங்கள் குடும்பம் இருக்கும் வீடு அலகாபாத்தில் உள்ளது; அதுவும் எங்கள் வீடு இல்லை. நான் வசிக்கும் இடம் எனக்கு வீடு அல்ல, அதனால் நான் கன்னியாகுமரியை விட்டு வெளியேறும்போது, ​​​​என் பொறுப்பு என்ன என்று என்னையே கேட்டுக் கொண்டேன், நான் இந்தியாவைப் புரிந்துகொண்டேன்” என்று தெரிவித்தார்.

MUST READ