
பெண்களின் மேலாடை இல்லாத உடலை ஆபாசமாகவோ, நாகரீகமற்றதாகவோ (அல்லது) பாலியல் உணர்வைத் தூண்டும் ஒன்றாகவோ கருதக்கூடாது என்று கேரள மாநில உயர்நீதிமன்றம் அதிரடியான கருத்தைக் கூறியுள்ளது.
தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட் ஹாரர் த்ரில்லர்!
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற பெண்ணியவாதி மீது கடந்த 2020- ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், இத்தகைய கருத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ரெஹானா பாத்திமா தனது மேலாடை இல்லாத உடல் மீது சிறு வயது மகன் மற்றும் மகளை வர்ண்ணம் தீட்ட வைத்து, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார்.
இதனால் சர்ச்சைக் கிளம்பி, அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், வழக்கில் இருந்து அவரை விடுத்துள்ள கேரள உயர்நீதிமன்றம், ஆண்களின் மேலாடை இல்லாத உடல் போலவே, பெண்களின் மேலாடை இல்லா உடலையும் இயல்பான ஒன்றாக கருத வேண்டும் என்று கூறியுள்ளது. பெண்களின் அரை நிர்வாண உடல், பாலியல் உடன் தொடர்புப்படுத்தப்படுவதாக சாடியுள்ள நீதிமன்றம், சூழலைப் பொறுத்தே அது, ஆபாசமா? அல்லது இயல்பானதா? என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ரஜினி படம் பாத்து தான் நானும் நடிகை ஆகணும்னு ஆசைப்பட்டேன்… நடிகை சுனைனா!
கேரளாவில் நடைபெற்ற முலை வரி சட்டத்திற்கு எதிரான போராட்டத்தைச் சுட்டிக்காட்டிய தனி நீதிபதி, கோயில்களில் உள்ள நிர்வாண பெண் சிற்பங்கள், பாலியல் தூண்டலுக்கு பதிலாக, கலையாகவும், புனிதமாகவும் பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.