spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஏழைப் பெண்களுக்கு மாதம் ரூபாய் 3,000 வழங்கப்படும்- பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தேர்தல் அறிக்கையை...

ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூபாய் 3,000 வழங்கப்படும்- பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது!

-

- Advertisement -

 

ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூபாய் 3,000 வழங்கப்படும்- பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது!
File Photo

தெலுங்கானா மாநிலத்தில் தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஏழை குடும்பப் பெண்களுக்கு மாதத்திற்கு 3,000 ரூபாய் தரப்படும் என பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சித் தெரிவித்துள்ளது.

we-r-hiring

5 கிராம் குட்கா வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30-ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை வேகமெடுத்துள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி, தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் ஏழை குடும்பப் பெண்களுக்கு சவ்பாக்கிய லட்சுமி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு மானியம் அளித்து, அதை 400 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா தொடங்கியது!

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இலவச காப்பீடு வழங்கப்படும் என்று பாரத் ராஷ்ட்ர சமிதி தெரிவித்துள்ளது. அதேபோல், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் உதவித்தொகை 10,000 ரூபாயில் இருந்து 16,000 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ