spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்!

-

- Advertisement -

 

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்!
Photo: sansad tv

புதிய நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, மகளிர் மசோதா மீதான விவாதம் இன்று (செப்.20) நடைபெறவுள்ளது.

we-r-hiring

பயணிகள் அச்சம்- நடுவானில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

மகளிர் இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தில் 128வது முறையாக திருத்தும் செய்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் 33% ஒதுக்கீட்டில், மூன்றில் ஒரு பங்கு பட்டியலினங்களைச் சேர்ந்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மகளிருக்கு தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். அதாவது பட்டியலின, பழங்குடியின இடஒதுக்கீடு போல அல்லாமல் மகளிருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் தேர்தலுக்கு தேர்தல் மாறுபடும். இப்போது நடைமுறையில் உள்ள பட்டியலின, பழங்குடியின தொகுதி ஒதுக்கீடுகள் மகளிர் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பழனி கோயிலுக்கு கைப்பேசி, படப்பதிவுக் கருவி எடுத்துச் செல்லத் தடை!

மக்களவைத் தொகுதிகளை மறுவரையறைச் செய்த பிறகு மகளிருக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வரும். மக்களவைத் தொகுதிகளை மறுவரையறைச் செய்யும் பணி 2026- ஆம் ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு பிறகு மக்களவைத் தொகுதிகளை மறுவரையறைச் செய்யும் பணிகள் நடைபெறவுள்ளது. 2024- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு அமலுக்கு வர வாய்ப்பில்லை. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, மாநில சட்டமன்றங்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பயணிகள் அச்சம்- நடுவானில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

மொத்தம் உள்ள சட்டமன்றங்களில் குறைந்தபட்சம் 50% சட்டசபைகள் இந்த இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்த பிறகே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு சட்டம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ