செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு மற்றும் கண்காச்சி, டெல்லியில் இன்று தொடக்கம். இந்தியாவிலேயே முதல்முறையாக மிக பிரமாணடமாக நடைபெறம் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கிவைக்கிறாா்.
டெல்லி பாரத் மண்டபத்தில் இந்திய ஏ.ஐ. தாக்கம் உச்சி மாநாடு இன்று முதல் 20-ம் தேதிவரை நடைபெற உள்ளது. அதனுடன் அதே மண்டபத்தில் “இந்திய ஏ.ஐ.தாக்கம் கண்காட்சி-2026“ என்ற கண்காட்சியும் இன்று முதல் 20-ம் தேதிவரை நடக்கிறது.

இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சுந்தர் பிச்சை, Sam Altman மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரைக்கின்றனர். மேலும் இந்திய தொழில் உலகின் முக்கிய நபர்களான முகேஷ் அம்பானி, என். சந்திரசேகரன், கீர்த்திவாசன், விஜயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். மொத்தமாக 40-க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
சர்வதேச அரசியல் தலைவர்களின் பங்கேற்பும் இந்த மாநாட்டுக்கு சிறப்பு சேர்க்கிறது. இம்மானுவேல் மேக்ரோன், லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, டோனி பிளேர் மற்றும் அன்டோனியோ குட்டெரஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் உரையாற்ற உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா உலக அரங்கில் வலுவான இடத்தைப் பெறும் நோக்கில் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான புதிய கூட்டாண்மைகள் மற்றும் முதலீடுகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
நமது நாடு AI மாற்றத்தில் முன்னணியில் உள்ளது – பிரதமா் பெருமிதம்


