Homeசெய்திகள்சந்திரயான்-3 அளிக்கும் தகவல்கள் :நிலவில் ஆய்வகம்:பிரம்மோஸ் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை பேட்டி

சந்திரயான்-3 அளிக்கும் தகவல்கள் :நிலவில் ஆய்வகம்:பிரம்மோஸ் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை பேட்டி

-

சந்திரயான்-3 அளிக்கும் தகவல்கள் நிலவில் ஆய்வகம் அமைக்க உதவும்: பிரம்மோஸ் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை பேட்டி:

நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முன்னாள் தலைமை அதிகாரியான பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை கலந்து கொண்டு பேசினார்.

சந்திராயன் அளிக்கும் தகவல்கள் நிலவில் ஆய்வகம் அமைக்க உதவும் பிரம்மோஸ் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை பேட்டி

அதில் அவர் கூறியதாவது, “சந்திரனின் தென் துருவத்தில் உலக அளவில் யாரும் இதுவரை அளவீடுகள், ஆய்வுகள் எதுவும் செய்யவில்லை. அதனால் சந்திரயான்-3 நிலவில் அதன் தட்ப வெப்ப நிலை, நில அதிர்வுகள், என்னென்ன தாதுக்கள் அங்கு கிடைக்கும் என்பதை ஆய்வு செய்யும். அங்குள்ள மண்ணில் எவ்வளவு நீர் மூலக்கூறுகள் உள்ளது என்பதை ஆய்வு செய்யும் வசதி அந்த ரோவரில் உள்ளது. தண்ணீர் இருந்தால்தான் மனிதன் ஆய்வுகளை நீண்ட நாட்கள் மேற்கொள்ள முடியும். ஒரு விண்வெளி ஆய்வகம் நிறுவ வேண்டுமென்றால் நிலவில் முக்கியமாக தண்ணீர் இருக்க வேண்டும். தண்ணீர் இருந்தால் ஆக்ஸிஜனை நாம் அங்கேயே உற்பத்தி செய்து கொள்ள முடியும். அங்கு நீர் மூலக்கூறுகள் இருப்பது நமக்கு பெரிய வரப்பிரசாதம். அப்படியிருந்தால் அந்த பகுதியில் நாம் விண்வெளி ஆய்வு கூடத்தை நிறுவ சாத்திய கூறுகள் உள்ளது. சந்திரயான்-3 அனுப்பும் தகவல்கள் ஆய்வு கூடம் அமைக்க உதவும்.

சந்திராயன் அளிக்கும் தகவல்கள் நிலவில் ஆய்வகம் அமைக்க உதவும் பிரம்மோஸ் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை பேட்டி

உலகத்திற்கே முதன்முறையாக இந்த தகவல்கள் 14 நாட்களில் தெரிய வரும். லேண்டரிலும் 4 கருவிகள் உள்ளன .அதிலிருந்து அதன் சுற்று வட்டார பகுதிகள் எவ்வாறு உள்ளன, என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அமெரிக்கா, ரஸ்யா, சீன, இந்தியா நாடுகள் ஒவ்வொரு இடத்திலும் தங்களுக்கு ஒரு விண்வெளிஆய்வு கூடத்தை கூட நிறுவலாம். இதற்கு பின் ஜப்பான், இஸ்ரேல் நாடுகள், கூட ஆர்வத்துடன் உள்ளன. மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவில் இருந்து என்ன தகவல்கள் வெளிவருகின்றன என்றும், அதனை பயன்படுத்தி கொள்ளவும் உள்ளனர்”. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

MUST READ