சென்னை காவல் ஆணையாளர் அவர்கள், வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா மற்றும் கத்தியுடன் வந்த 2 நபர்களை மடக்கிப் பிடித்த புனித தோமையர்மலை போக்குவரத்து போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை புனித தோமையர்மலை போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமைக்காவலர்கள் G.பிரகாஷ், S.பிரவீன்குமார் மற்றும் முதல் நிலைக்காவலர் J.சதீஷ்குமார் ஆகியோர் நேற்று இரவு ஆலந்தூர். ஜிம்கோ கம்பெனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது. அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் போலீசாரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு ஓடியபோது, போலீசார் அவர்களை துரத்திச் சென்று 2 நபர்களையும் மடக்கி பிடித்து விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் 2 கிலோ கஞ்சா மற்றும் 1 கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் மதுரை உடிலம்பட்டி எம் ஜி ஆர் நகர் பகுதியை சேர்ந்த கருப்பு (எ) மதுர கருப்பு(26) சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த வீரமணி(19) ஆகியோரை பிடித்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 1 கத்தியை பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கைக்காக புனித தோமையர்மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட கருப்பு (எ) மதுர கருப்பு மீது கொலை. கொள்ளை, வழிப்பறி, திருட்டு என சுமார் 16 குற்ற வழக்குகளும், வீரமணி மீது திருட்டு உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண். அவர்கள் வாகன தணிக்கையில் சிறப்பாக செயல்பட்டு, கஞ்சா மற்றும் கத்தியுடன் இருந்த 2 நபர்களை பிடித்த புனித தோமையர்மலை போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் I.ரமேஷ் தலைமைக் காவலர்கள் G.பிரகாஷ், S.பிரவீன்குமார் மற்றும் முதல் நிலைக்காவலர் J.சதீஷ்குமார் ஆகியோரை இன்று நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி வெகுமதி வழங்கினார்.