Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தாமரை விதைகளில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?

தாமரை விதைகளில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?

-

தாமரை விதைகளின் நன்மைகள்:

தாமரை விதைகளில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. தாமரை பூவில் இருந்து ஃபாக்ஸ் நட்ஸ் என்றழைக்கப்படும் தாமரை விதைகள் கிடைக்கின்றன. தாமரை விதைகளில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?தாமரை விதைகளில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சிங்க், புரதம், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன. மேலும் வைட்டமின் கே, வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் போன்றவைகளும் உள்ளது. தாமரை விதையானது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதாவது, இது குறைவான கலோரிகளைக் கொண்டதாக இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. அதேசமயம் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தீர்வாக பயன்படுகிறது. மலச்சிக்கலுக்கு மட்டுமல்லாமல் இது இதய நோய், புற்றுநோய், நீரழிவு நோய் போன்றவைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. நம் தினமும் ஹார்லிக்ஸ், பூஸ்ட் என கடைகளில் வாங்கி சாப்பிடுவதைவிட பாதாம், முந்திரி ஆகிய நோட்ஸ் வகைகளுடன் இந்த தாமரை விதைகளையும் அரைத்து ஹெல்த் மிக்ஸ் ஆக பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். தாமரை விதைகளில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?இந்த தாமரை விதைகளை சிறிதளவு நெய்யில் வறுத்து சாப்பிடலாம். தேவைப்பட்டால் மசாலாக்களும் சேர்த்து ஸ்நாக்ஸ் ஆக வும் எடுத்துக் கொள்ளலாம்.

இருப்பினும் தாமரை விதையை சாப்பிடுவதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

MUST READ