Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியான வாழைத்தண்டு சூப்;

அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியான வாழைத்தண்டு சூப்;

-

தேவையான பொருட்கள்;

வாழைத்தண்டு         -1கப்

மஞ்சள் தூள்               -1சிட்டிகை

சீரகப்பொடி               -1/4 ஸ்பூன்

மிளகுத்தூள்               -தேவையான அளவு

எலுமிச்சைசாறு           -சிறிது

உப்பு                            -தேவையான அளவு

கடுகு                           -1/2ஸ்பூன்

கறிவேப்பிலை             -சிறிது

கொத்தமல்லி              -சிறிது

செய்முறை;

  • வாழைத்தண்டில் உள்ள நார் பகுதியை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.நறுக்கிய வாழைத்தண்டை சிறிது நேரம் மோரில் ஊறவைக்கவும்.
  • பிறகு குக்கரில் வாழைத்தண்டு,தேவையான அளவு உப்பு  ,மஞ்சள்தூள்,2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
  • வெந்த வாழைத்தண்டை ஒரு மிக்ஸி சாரில் போட்டு, வேகவைத்த நீரையே ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.இக்கலவையை வானலில் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு ,கறிவேப்பிலை, சீரகப்பொடி,மிளகு தூள்,ஆகியவற்றை சேர்த்து தாலித்து கொதிக்கும் சூப்பில் கலந்து விடவும்.
  • எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் வாழைத்தண்டு சூப் ரெடி.
  • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகக் கூடிய ஒரு சத்தான சூப்பாகும்.
  • வாழைத்தண்டு சூப் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.

MUST READ