Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வெறும் வயிற்றில் இதை மட்டும் குடிக்கவே குடிக்காதீங்க!

வெறும் வயிற்றில் இதை மட்டும் குடிக்கவே குடிக்காதீங்க!

-

- Advertisement -

வெறும் வயிற்றில் இளநீர் குடிக்க கூடாது என எச்சரிக்கை வழங்கப்படுகிறது.வெறும் வயிற்றில் இதை மட்டும் குடிக்கவே குடிக்காதீங்க!

இளநீர் என்பது உடலின் நீரிழப்பை ஈடு செய்யக்கூடிய ஒரு இயற்கை பானம் என்பதை அனைவரும் அறிந்ததே. அதாவது இளநீரானது தாய்ப்பாலுக்கு ஈடானது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகினால் பல நன்மைகள் கிடைக்கும். உடல் சூடு தணியும், ஜீரண சக்தி மேம்படும், சிறுநீரகங்களை சுத்திகரிக்கும், உடல் சோர்வு குறையும், தோல் பிரச்சனைகள் தீரும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவ்வாறு இளநீர் பருகுவதால் உடலுக்கு மிகச்சிறந்த நன்மைகள் கிடைத்தாலும் வெறும் வயிற்றில் அதை குடிக்க கூடாதாம். உணவிற்கு இடைப்பட்ட நேரத்தில் தான் குடிக்க வேண்டுமாம்.வெறும் வயிற்றில் இதை மட்டும் குடிக்கவே குடிக்காதீங்க!

இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஜீரணத்தில் சிரமம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மட்டுமில்லாமல் வயிற்று வலி, வாந்தி, குடல் வீக்கம் போன்றவைகளும் ஏற்படலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், குளுக்கோஸ் சத்துக்கள் நேரடியாக ஜீரணப் பாதையில் செல்வதால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.வெறும் வயிற்றில் இதை மட்டும் குடிக்கவே குடிக்காதீங்க!

எனவே காலை உணவுக்கு பின் அல்லது நண்பகல் உணவுக்கு முன் இளநீர் குடிக்கலாம் என்றும் ஒரே நேரத்தில் 200 முதல் 250 மில்லி லிட்டர் அளவிற்கு இளநீர் குடிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ