spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்டேஸ்டான அசோகா அல்வா செய்வது எப்படி?

டேஸ்டான அசோகா அல்வா செய்வது எப்படி?

-

- Advertisement -

அசோகா அல்வா செய்ய தேவையான பொருள்கள்:டேஸ்டான அசோகா அல்வா செய்வது எப்படி?

பாசிப்பருப்பு -100 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
கோதுமை மாவு – 2 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 10
நெய் – 50 கிராம்
கேசரி பவுடர் – சிறிதளவு

we-r-hiring

அசோகா அல்வா செய்யும் முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவில் நெய் ஊற்ற வேண்டும். நெய் சூடான பின் முந்திரிப் பருப்பை போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பாசிப்பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

பாசிப்பருப்பு நன்றாக வெந்து வந்த பிறகு அதனை மசித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடான பின் கோதுமை மாவை சேர்த்து கிளறி விட வேண்டும். அதனுடன் மசித்த பாசிப்பருப்பினை சேர்க்க வேண்டும். அதேசமயம் பாதி அளவு நெய்யினையும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.

தண்ணீர் இல்லை என்றால் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி விட வேண்டும். அல்வா பதத்திற்கு வரும் வரை கைவிடாமல் கிளற வேண்டும்.

பின் ஓரளவிற்கு தண்ணீர் வற்றி வந்த பிறகு சர்க்கரையையும் கேசரி பவுடரையும் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து அல்வாவுடன் சேர்ந்து கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.டேஸ்டான அசோகா அல்வா செய்வது எப்படி?

பின் மீதமுள்ள நெய் மற்றும் முந்திரி பருப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது டேஸ்டான அசோகா அல்வா ரெடி.

MUST READ