பலாப்பழத்தில் பல நன்மைகள் ஒளிந்திருக்கிறது.
பலாப்பழம் என்பது சத்துக்கள் நிறைந்த பழமாகும்.

பலாப்பழம் என்பது செரிமானத்தை மேம்படுத்தும். இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். இது போன்ற ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது பலாப்பழம்.
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம் ஆகியவை அடங்கியுள்ளது.
இதில் இருக்கும் வைட்டமின் சி சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பலாப்பழத்தில் இருக்கும் நார் சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கும்.
பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்க உதவுகிறது.
பலாப்பழமானது கர்ப்பிணி பெண்களுக்கும் பயன் தரும். இதில் இருக்கும் பி6 மற்றும் இரும்புச்சத்து கரு வளர்ச்சிக்கு நல்லது. இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.
பலாப்பழம் என்பது உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். ஏனென்றால் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.
பலாப்பழத்தை அளவாக எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைகள் கிடைக்கும்.
அடுத்தது இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளமையாக வைத்திருக்க உதவும்.
இருப்பினும் ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் பலாப்பழத்தை தவிர்ப்பது நல்லது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு சாப்பிடுவது சிறந்தது.