ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 4 கப்
உளுந்து – 1 கப்
ஜவ்வரிசி – கால் கிலோ
வெங்காயம் – 3
கடுகு – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம் செய்ய முதலில் அரிசி மற்றும் உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து இட்லி, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து புளிக்க வைக்க வேண்டும். பின்னர் புளிக்க வைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதே சமயம் ஊத்தப்பம் செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் ஜவ்வரிசியை ஊற வைக்க வேண்டும். இப்போது வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பின் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளித்து மாவில் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.
இப்போது தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடான பின் மாவினை ஊற்றி அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி விட வேண்டும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்க வேண்டும்.
அருமையான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம் ரெடி.
தேவைப்பட்டால் இதில் வெங்காயத்துடன் கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். மேலும் சுவைக்காக எண்ணெய் பதிலாக நெய்யினை சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்க்கும்போது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.