கருப்பட்டி நெய்யப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 500 கிராம்
கருப்பட்டி – 100 கிராம்
ஏலக்காய் – 2
வாழைப்பழம் – 1
கோதுமை மாவு – ஒரு ஸ்பூன்
நெய் – அரை கப்
தேங்காய் எண்ணெய் – அரை கப்
செய்முறை:
கருப்பட்டி நெய்யப்பம் செய்ய முதலில் பச்சரிசி மாவினை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும் வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஏலக்காயை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பழத்தினையும் மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது பச்சரிசி மாவுடன் கருப்பட்டி, ஏலக்காய் தூள், பசித்த வாழைப்பழம் கோதுமை மாவு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இதனை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
இப்போது தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பணியார கல்லை வைக்க வேண்டும். கலந்து வைத்த மாவினை பணியாரக் கல்லில் ஊற்றி இருபுறமும் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்க வேண்டும். மிதமான தீயில் வேகவிட்டு எடுக்க வேண்டும்.
குறிப்பு:
தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஒரு கரண்டி அளவு மாவினை எடுத்து பொரித்து எடுக்கலாம்.
இந்த இரண்டு முறைகளிலும் கருப்பட்டி நெய்யப்பம் செய்யலாம். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதிக எண்ணெய்யை தவிர்ப்பதற்கு பணியார கல்முறையை பின்பற்றுவது நல்லது.