ரெட் வெல்வெட் கேக் செய்வது எப்படி?
ரெட் வெல்வெட் கேக் செய்ய தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 2 கப்
சர்க்கரை – 2 கப்
எண்ணெய் – 2 கப்
சோடா உப்பு – 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
முட்டை – 4
வெள்ளை வினிகர் – 2 தேக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி
கெட்டியான தயிர் – 2 கப்
ரெட் கலர் பவுடர் – 3 தேக்கரண்டி
கிரீம் சீஸ் – தேவையான அளவு
செய்முறை:
ரெட் வெல்வெட் கேக் செய்ய முதலில், மைதா மாவு, சோடா உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை இரண்டு முறை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், முட்டை, சர்க்கரை, வினிகர், வெண்ணிலா எசன்ஸ் போன்றவற்றை ஒன்றாக கலந்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் ரெட் கலர் பவுடரையும் சேர்த்து அடிக்க வேண்டும்.
இப்போது சலித்து வைத்துள்ள மாவு கலவையை அதில் கொட்டி கலக்க வேண்டும். அதேசமயம் கெட்டியான தயிரையும் சேர்த்து கலக்க வேண்டும்.
இக்கலவையை வேறொரு பாத்திரத்தில் மாற்றி பேக் செய்ய வேண்டும். அதன்படி கேக் கலவையை இரண்டாகப் பிரித்து தனித்தனியாக பேக் செய்ய வேண்டும்.
பின்னர் தயாரான இரண்டு கேக்குகளின் நடுவில் க்ரீம் சீஸ் வைத்து பரப்பி அதனை ஒரே கேக்காக செட் செய்ய வேண்டும். இப்போது கலர்ஃபுல்லான ரெட் வெல்வெட் கேக் தயார்.


