Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சர்க்கரை வள்ளிக் கிழங்கில் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க!

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க!

-

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளி கிழங்கு – 250 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
முந்திரிப் பருப்பு – 10
நெய் – 100 மில்லி
கேசரி பவுடர் – சிறிதளவு

செய்முறை:சர்க்கரை வள்ளிக் கிழங்கில் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க!

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா செய்ய முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கினை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் தோல் உரித்து வசித்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் சர்க்கரையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடாக்க வேண்டும். சர்க்கரை கரைந்த பின்னர் மசித்து வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து கிளற வேண்டும்.

அதன் பின் நெய்யினை பொறுக்கி கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை வள்ளி கிழங்கில் சேர்க்க வேண்டும். அதே சமயம் கைவிடாமலும் கிளறி விட வேண்டும்.

அல்வா பதத்திற்கு வரும் சமயத்தில் ஏலக்காய் தூள் மற்றும் கேசரி பவுடர் ஆகிவற்றை சேர்க்க வேண்டும்.

சிறிதளவு நெய்யில் முந்திரி பருப்பினை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அல்வா தயாராகி வந்ததும் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பினை சேர்த்து கிளறிவிட்டு இறக்க வேண்டும்.சர்க்கரை வள்ளிக் கிழங்கில் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க!

இப்போது சூப்பரான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா தயார்.

சர்க்கரை வள்ளி கிழங்கு மலச்சிக்கலை குணப்படுத்த உதவும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த அல்வாவை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

MUST READ