பொதுவாக தேநீரை மன அழுத்தத்தை குறைக்க தினசரி நாம் எடுத்துக் கொள்கிறோம். அதேசமயம் பலரும் தலைவலி, உடல் அசதி போன்றவற்றை கட்டுப்படுத்த தேநீர் அருந்துகிறார்கள். எனவே தினமும் தேநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா? என்பதைப் பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.
அதாவது தேநீர் குடிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றுதான் சொல்லப்படுகிறது. இது பல வழிகளில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தெரியவந்துள்ளது. கிரீன் டீ, பிளாக் டீ போன்ற மூலிகை வகை தேநீரை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் இளமையை மேம்படுத்துகிறது.
தேநீரில் உள்ள டானின்கள், ப்ளுரைடு போன்றவை வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இது நீரேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. தேநீரில் உள்ள காஃபின்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க வழிவகை செய்கிறது.
குறிப்பாக கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, மிளகு, பட்டை போன்றவைகள் உள்ளடங்கிய
மூலிகை தேநீர், பாரம்பரிய தேநீர் வகைகளில் சாதாரண காபியில் இருக்கும் காஃபினை விட 50 சதவீதத்திற்கும் குறைவான காபின்கள் காணப்படுகிறது.
எனவே மூலிகை தேநீர் குடிப்பதால் அஜீரணக் கோளாறு, குமட்டல் போன்றவை குறையும். மேலும் இது இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. அத்துடன் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
எனவே சர்க்கரை போன்ற பிற சேர்க்கைகள் இல்லாமல் உட்கொள்வதால் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். அதுமட்டுமில்லாமல் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே தேநீர் உட்கொள்வது சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.