நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே மிகவும் சிறியதானவை சுண்டைக்காய். இதனை ஊட்டச்சத்துக்களின் சேமிப்பு கிடங்கு என்று கூட கூறலாம். கிருமிகள் முதல் கொழுப்புகள் வரை நம் உடம்பில் தேவையில்லாமல் இருப்பவற்றை அளிப்பதில் இந்த சுண்டைக்காய் முக்கிய பங்காற்றுகிறது.
அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி சத்துக்களை இந்த சுண்டைக்காய் கொண்டுள்ளது. ஆரஞ்சு, பப்பாளி, கொய்யாப்பழம் போன்றவர்களுக்கு ஈடான வைட்டமின் சி சத்துக்கள் இந்த சுண்டைக்காயில் நிறைந்துள்ளன.
தற்போது சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.

1. சுண்டைக்காய் என்பது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் ஜீரண சக்தியை தூண்டவும் உடலின் நச்சுக்களை வெளியேற்றவும் இது பயன்படுகிறது.
2. நரம்பு மண்டலத்திற்கு சக்தி கொடுக்கவும் பார்வை திறனை அதிகரிக்கவும் சுண்டைக்காய் உதவுகிறது.
3. நினைவாற்றலை அதிகப்படுத்தவும் சுண்டைக்காய் பயன்படுகிறது.
4. பிரசவமான பெண்களுக்கு பதிய சாப்பாடாக கொடுக்கும் அங்காய பொடி வகைகளில் இந்த சுண்டைக்காய் சேர்க்கப்படுகிறது.
5. காய்ச்சல் இருக்கும் சமயங்களில் சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகமாகி, நோய் எதிர்ப்பு சக்தி கிருமிகளுடன் போராட வழிவகை செய்கிறது.
6. சுண்டைக்காயில் இருக்கும் இரும்புச்சத்து, ரத்த சோகையை குணப்படுத்துகிறது.
7. கேழ்வரகு, கீரை போன்றவற்றிற்கு இணையான சத்துக்களை இந்த சுண்டைக்காய் பெற்றிருப்பதால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
8. ரத்தக்குழாய்களில் கொழுப்புகள் படிவதை தடுக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இந்த சுண்டைக்காய் பயன்படுகிறது.
சுண்டைக்காயில் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


