பன்னீர் ஆப்பிளின் மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம்.
பன்னீர் ஆப்பிளை ரோஸ் ஆப்பிள் என்றும் அழைப்பர். பன்னீர் ஆப்பிளில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, பி1, பி3 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதேபோல் இதில் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது. அந்த வகையில் பன்னீர் ஆப்பிள் சாப்பிடுவதால் இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பிற தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கலாம். இதில் உள்ள புரதம், நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தும்.

இதில் உள்ள கால்சியம், எலும்புகளுக்கு வலிமை தருகிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். மேலும் தோலை சுறுசுறுப்பாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். 
இதில் குறைந்த அளவிலான கலோரிகள் இருப்பதாலும், அதிக நார்ச்சத்து இருப்பதாலும் பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும்.
இது தவிர இந்த பழத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து ஆகியவைகள் கிடைப்பதோடு வாந்தி, மயக்கத்தை குறைக்கவும் இது பயன்படுகிறது. அடுத்தது இது கல்லீரல் மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க பெரிய அளவில் உதவுகிறது.
எனவே இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இதன் சாற்றிலும் பல நன்மைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


