Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

-

கர்ப்பிணியாக இருக்கும்போது பெண்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர். வாந்தி, மயக்கம், கால் வீக்கம் என பல பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிறது. தற்போது ஒரு சில முறைகளை பின்பற்றி இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய முயற்சிக்கலாம்.கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கர்ப்பிணியாக இருக்கும் சமயத்தில் சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. அப்போது இரண்டு தேக்கரண்டி அளவு சீரகத்தூள், மூன்று தேக்கரண்டி அளவு நெய் ஆகியவற்றை குழைத்து வெற்றிலையின் பின் புறத்தில் ஊசி பின் அதனை வதக்கி 200 மில்லி லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வயிற்று வலி ஏற்படும் சமயங்களில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமடையும்.

கருத்தரித்த பெண்களுக்கு ஏற்படும் வாந்தி பிரச்சனையை சரி செய்ய லவங்கத்தை இடித்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பின் அதனை வடிகட்டி குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கர்ப்ப காலத்தில் கை, கால் வீக்கம் குணமடைய முருங்கை இலையை காய்ச்சி காலை வேளையில் குடித்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.

மாம்பழம் என்பது ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்று. இதனை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வர குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

கர்ப்பிணி பெண்கள் வெற்றிலை பாக்குடன் சிறிதளவு குங்குமப்பூவையும் சேர்த்து சாப்பிட்டு வர குழந்தை சிவப்பாக பிறக்கும்.கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

காபி கொட்டையை மென்று சாப்பிட்டு வர கர்ப்ப காலத்தில் எச்சில் ஊறுவதை தடுக்கலாம்.

இருப்பினும் இம்முறைகளை பின்பற்றுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ