Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்என்னது தினமும் குளிக்க கூடாதா?

என்னது தினமும் குளிக்க கூடாதா?

-

- Advertisement -

குளியல் என்பது நமக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. அதாவது நாம் வெளியில் செல்லும்போது மாசுக்கள் நம் உடம்பில் பட்டு பலவிதமான தொற்றுகள் உண்டாகிறது. ஆகையால் வெளியில் சென்று வீட்டுக்கு வரும்போது குளியல் என்பது அனைவருக்கும் அவசியம்.என்னது தினமும் குளிக்க கூடாதா? அப்படி தினமும் குளிக்கும்போது வெளியில் இருக்கும் வைரஸ்கள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கலாம். அதேசமயம் வெயில் காலத்தில் இரண்டு முறை குளிப்பது உடல் உஷ்ணத்தை குறைப்பது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

அதேசமயம் குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் தினமும் வெந்நீரில் குளித்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். என்னது தினமும் குளிக்க கூடாதா?தினமும் நாம் வெந்நீரில் குளிக்கும் போது சருமம் வறண்டு போய் விடுகிறது. சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசை நீங்கி விடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி தினமும் வெந்நீரில் குளிப்பதினால் உடல் பலவீனம் அடைவதுடன் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் நம் உடலில் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பை நாமே ஏற்படுத்தி தருவதாக சொல்லப்படுகிறது. ஆகையால் தினமும் வெந்நீரில் குளிப்பதை தவிர்த்து விடுங்கள்.என்னது தினமும் குளிக்க கூடாதா?

மேலும் தினமும் நாம் குளிர்ந்த நீரில் குளித்தாலுமே சோப்பு போட்டு குளிப்பதை தவிர்க்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை சோப்பு பயன்படுத்தினால் போதுமானது. ஏனென்றால் சோப்பை பயன்படுத்துவதாலும் நம் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசை நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ