spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இல்லத்தரசிகளுக்கு சில சூப்பரான சமையல் டிப்ஸ்!

இல்லத்தரசிகளுக்கு சில சூப்பரான சமையல் டிப்ஸ்!

-

- Advertisement -

இல்லத்தரசிகளுக்கு சில சூப்பரான சமையல் டிப்ஸ்!இல்லத்தரசிகளுக்கு சில சூப்பரான சமையல் டிப்ஸ்!

1. இட்லி, தோசை மாவு சீக்கிரம் புளிக்காமல் இருக்க தண்ணீருக்கு பதிலாக மாவுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைக்க வேண்டும்.
2. ரசம் மணமாக இருக்க சமையல் எண்ணெய்க்கு பதிலாக நெய்யில் கடுகு, மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
3. அரை கப் கருப்பு கொண்டைக்கடலை , அரை கப் பாசிப்பயிறு , ஒரு ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்ற 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அரைத்து அதை 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு இந்த மாவில் தோசை செய்தால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.இல்லத்தரசிகளுக்கு சில சூப்பரான சமையல் டிப்ஸ்!4. அடை செய்ய மாவு அரைக்கும் போது அதில் அரை கப் அளவு சிறுபயறும் கால் கப் அளவு வேர்க்கடலையும் சேர்த்து அரைத்தால் டேஸ்டாக இருக்கும்.
5. புதினா, துளசி ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி அதனை டீ போடும்போது தேயிலையுடன் சேர்த்து கொதிக்க விட்டால் தலைவலி பிரச்சனை குணமாகும்.
6. குருமா அல்லது பன்னீர் பட்டர் மசாலா தயார் செய்யும் போது தக்காளி, கசகசா, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து குருமாவில் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
7. மாங்காய் ஊறுகாய் செய்யும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் புளிப்பான மாங்காயும் கூட ருசியாக இருக்கும்.இல்லத்தரசிகளுக்கு சில சூப்பரான சமையல் டிப்ஸ்!8. தோசை சுடுவதற்கு முன்பாக மாவில் சிறிதளவு சீரகத்தை தட்டி சேர்த்தால் தோசை மணமாக இருக்கும்.
9. சமைக்கும்போது மீதமாகும் தேங்காய் துருவலை ஒரு கடாயில் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி மறுநாள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

MUST READ