பிளாக் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவற்றில் பாலி பீனால்கள் அதிகம் காணப்படுகின்றன. இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி சொத்தைப்பற்கள் உண்டாகும் அபாயத்தை குறைக்கிறது. மேலும் இது வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
பாதாம், முந்திரி ஆகிய நட்ஸ் வகைகளை மென்று சாப்பிடுவதனால் அதிக அளவிலான எச்சில் உற்பத்தி ஆகிறது. இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் நீக்கப்பட்டு சொத்தைப்பற்கள் உண்டாவது குறைகிறது.

பசலைக் கீரை போன்ற கீரை வகைகளில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. இவை வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. மேலும் இது பற்களின் எனாமலை அதிகரிக்க உதவி புரிகிறது.
ஆப்பிள் என்பது ஈறுகளின் ஆரோக்கியத்தை தூண்டுகிறது. அதேசமயம் சொத்தை பற்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே ஆப்பிளை மென்று சாப்பிடுவதனால் அதிக அளவிலான எச்சில் சுரக்கப்பட்டு அமிலத்தன்மை குறைந்து வாய் துர்நாற்றமும் குறைகிறது.
கேரட் , செலரி போன்றவற்றை பச்சையாக மென்று சாப்பிடுவதனால் ஈறுகள் வலிமை பெறுகிறது. பற்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் பற்களின் எனாமலை பாதுகாக்கவும் உதவுகிறது.
ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இம்முறைகளை எல்லாம் பின்பற்றுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
