கற்றாழை சாறு என்பது மலச்சிக்கலை தீர்க்கும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும், கல்லீரலை சுத்தம் செய்யும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இது தவிர கற்றாழை சாறு கூந்தலுக்கும், சருமத்திற்கும் ஆரோக்கியம் தரும். அதாவது கற்றாழை சாறு எடை குறைப்பு, பளபளப்பான சருமம், முடி வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தினமும் கற்றாழை சாறு குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கற்றாழை சாறு குடிப்பது நம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. ஒரு டம்ளர் கற்றாழை சாறு எடுத்துக் கொண்டால் நம் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், வைட்டமின் பி 12, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் கிடைக்கும். கற்றாழை சாறிலிருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பல் பிரச்சனைகளை தீர்க்கவும் உதவும்.
கற்றாழையானது ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. எனவே கற்றாழையின் சாறு, முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொன்று முகப்பருக்களினால் உண்டாகும் வலி, எரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தருகிறது. மேலும் இது தோல் சுருக்கங்களை குறைக்கவும் உதவுகிறது.

அடுத்தது கற்றாழை சாற்றில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதனால் உடல் பருமன் குறையும். தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை சாறு குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து தீர்வு தருகிறது. உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க கற்றாழை சாறு உதவுகிறது.
தலைமுடி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க நெல்லிக்காயை கற்றாழையுடன் சேர்த்து அரைத்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எனவே என்றும் இளமையாக இருக்க கற்றாழை சாறு குடிக்கலாம். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


