இன்றைய இளைய தலைமுறையினர் செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவதால் இரவில் சீக்கிரம் தூங்குவது கிடையாது. இதனால் பல பிரச்சனைகள் உண்டாகிறது.
அதில் தூக்கமின்மை பிரச்சனை மிகவும் முக்கியமானது. ஏனென்றால் செல்போன், லேப்டாப் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் ஒளிகள் கண் எரிச்சலை உண்டாக்கி தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் மன அழுத்தமும் ஏற்படுகிறது. எனவே தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட கீழ்கண்ட வழிகளை பின்பற்றுவது நல்லது.
1. இரவு 10 மணி முதல் 3 மணி வரையிலும் உடல் ஓய்வில் இருக்க வேண்டும். அதாவது குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம்.
2. அப்பொழுதுதான் ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் நன்றாக இயங்கி நம் ஆரோக்கியம் மேம்படும்.
3. நிம்மதியாக தூங்குவதால் நுரையீரலும், சிறு குடலும் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
4. இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் செரிமான பிரச்சனை, வயிற்றில் கட்டி, கேன்சர், அல்சர் போன்றவை ஏற்படும். பொதுவாக தூக்கம் வரவில்லை என்றால் புத்தகம் படிக்கலாம். ஆனால் மொபைல், லேப்டாப் பயன்படுத்தக் கூடாது.
5. தூங்க செல்வதற்கு முன்னர் பிடித்தமான இசை கேட்கலாம். இரவில் குளித்துவிட்டு படுக்க சென்றால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
6. மேலும் இரவில் தூங்க செல்லும் முன் மஞ்சள் பால் குடிக்கலாம்.
7. இது தவிர தூங்க செல்வதற்கு முன்பாக மூச்சுப் பயிற்சி செய்யலாம். இது நல்ல பலன் கொடுக்கும்.

இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


