spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

-

- Advertisement -

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? என்ற சந்தேகத்தில்  பெரும்பாலோனோா் அதனை சாப்பிடாமல் தவிப்பதுண்டு. அந்த சந்தேகத்திற்கான தீா்வை இங்கே காணலாம்.நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றக்கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்திற்கு நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கிறது. நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறுகின்றன. அத்தகைய கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்பட்டு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து, மேலே குறிப்பிட் பிரச்சனைகள் வராமல் தடுக்க பெரிதும் துணைப்புாிகின்றன.

பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். நெல்லிக்காய் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்து நம் உடலிலிருந்து கபத்தை வெளியேற்றும். அதனைத்தான் நாம் சளி பிடித்துக்கொண்டதாக நினைத்துக் கொள்கிறோம். உண்மையில், நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சளி மற்றும் இருமலை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. அதே நேரம், இரவில் நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?குழந்தைகளுக்கு பெரிய நெல்லிக்காயின் சுவை அவ்வளவாகப் பிடிக்காது. நெல்லிக்காய் சாதம் செய்து கொடுக்கலாம். நெல்லிக்காய் ஜூஸ் போட்டு கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுடைய வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை சிறு துண்டுகளாக்கி, அதில் போட்டு தண்ணீரை ஊற்றி ஊற வைத்துவிடலாம். நெல்லிக்காய் ஊறிய பின்னா் இந்தத் தண்ணீரைக் குடித்தாலே குழந்தைகளுக்குப் போதுமான வைட்டமின் `சி’ கிடைத்துவிடும். ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நெல்லிக்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்பதால், இந்தப் பிரச்னைகளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், ஓர் இயற்கை மருத்துவரிடம் தினசரி எத்தனை நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டு அதன் பிறகு சாப்பிட வேண்டும்.

நொறுங்கத் தின்றால் நூறு வயது…. இது உண்மையா?

we-r-hiring

MUST READ