ராகவா லாரன்ஸ் புதிய படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் தற்போது இந்தியாவின் மிக முக்கிய இயக்குனராக உருவெடுத்துள்ளார். அவர் தற்போது விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் புதிய படத்திற்காக ராகவா லாரன்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. லோகேஷ் கதை எழுதி திரைக்கதை அமைத்து தயாரிக்க இருக்கும் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை லோகேஷின் நண்பர் ‘மேயாத மான்’ படத்தின் இயக்குனர் ரத்னகுமார் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
விக்ரம் படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் தேதிகள் வழங்குவதில் சில சிக்கல்கள் இருந்ததால் படத்தில் நான் முடிக்க முடியவில்லை. அதனால் அந்தக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள ‘ருத்ரன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.