Homeசெய்திகள்அரசியல்எம்.கே.எஸ். - இபிஎஸ் ஒப்பந்த அரசியலா? 83% பேர் சொல்வதென்ன?

எம்.கே.எஸ். – இபிஎஸ் ஒப்பந்த அரசியலா? 83% பேர் சொல்வதென்ன?

-

எ

திமுகவின் தேர்தல் அறிக்கையில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவரப்படும் என்றும், கொடநாடு வழக்கில் உண்மைக்குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தது கண்டு கொதித்து எழுந்தார் எடப்பாடி பழனிச்சாமி .

இதை எதற்கு ஒரு முக்கிய பிரச்சினையாக அதுவும் தேர்தல் வாக்குறுதியில் திமுக கொண்டு வர வேண்டும் என்று ஆத்திரப்பட்டார். ஆனால் மக்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். மக்களுக்கு இந்த உண்மையை தெரிவிக்க வேண்டும் . அதனால்தான் தேர்தல் வாக்குறுதியில் இதை இடம்பெறச் செய்திருக்கிறோம் என்று விளக்கம் அளித்திருந்தார் ஸ்டாலின்.

ம்

ஆனால் , ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நெருங்கி விட்ட நிலையிலும் கூட இன்னமும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருக்கும் மர்மங்களும் விலகாமல் இருக்கின்றன.

கோடநாடு வழக்கில் பல சிறப்பு தனி குழுக்கள் அமைத்து விசாரணை நடந்து வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி உடன் முதல்வர் ஸ்டாலின் டீலிங் செய்து கொண்டார் என்றே பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி தனது வலைத்தளத்தில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி இருக்கிறார்.

ச்

சொன்னதை செய்வேன்! செய்வதை சொல்வேன்! கலைஞரின் மகன் நான்! 90 நாட்களுக்குள் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என்றார். 2 வருடமாகியும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? இ.பி.எஸ் & முன்னாள் அமைச்சர்களுடன் ஒப்பந்த அரசியலா ? என்று கேட்டிருக்கிறார் அவர். இதற்கு, ‘ஆம்’ என்று 83% பேரும், ’இல்லை’ என்று 17 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

MUST READ