தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு,பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நாளை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் தலைமைக் கழகத்தைச் சேர்ந்த 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் 120 மாவட்டமாக தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டச் செயலாளருடன் ஒரு மாவட்டத்திற்கு 15 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள் செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
நாளை காலை 9 மணிக்கு நடைபெற உள்ள இந்த பொதுக்குழு கூட்டம் நண்பகல் ஒரு மணி வரை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலைவர் விஜய் அரை மணி நேரத்திற்கு மேலாக பேச உள்ளதாகவும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரவுள்ள நிர்வாகிகளுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளாது.