Homeசெய்திகள்அரசியல்கலைஞரை விமர்சனம் செய்ததால் நீதிமன்ற உத்தரவின் படி - சீமான் மீது...

கலைஞரை விமர்சனம் செய்ததால் நீதிமன்ற உத்தரவின் படி – சீமான் மீது வழக்கு பதிவு

-

- Advertisement -

கரூர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலைஞரை விமர்சனம் செய்ததால் நீதிமன்ற உத்தரவின் படி - சீமான் மீது வழக்கு பதிவு

கரூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை காதகன், கயவன்,தீய சக்தி, கருநாகம் மற்றும் சண்டாளன் என்று சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக இழிவுபடுத்தி அவதூறாக பேசி. இணையதளத்திலும் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக  சீமான் மீது குற்றவியல்  நடவடிக்கை எடுக்க கோரி கரூர் வழக்கறிஞர்  தமிழ் இராஜேந்திரன் கடந்த 07-10-24 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

போலீஸ் என்ற திமிரில் அடுத்தவன் மனைவியிடம் தகராறு; ஜெயிலுக்கு போவதற்கும் வெட்கப்படவில்லை

இந்த நிலையில், கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் ஒன்று நீதிபதி கடந்த 14. 10. 2024  சீமான் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விசாரித்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட இரண்டு சட்டப்பிரிவுகள் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

MUST READ