அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்.
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஓபிஎஸ் இபிஎஸ் என்றால் என்ன அர்த்தம் என இரு தரப்பு வழக்கறிஞர்களிடமும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். வழக்கு விசாரணையின் போது ஓபிஎஸ் இபிஎஸ் என குறிப்பிட்டு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்த போது இந்தக் கேள்வியினை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர்.
இருவரும் சொந்த ஊர்களின் பெயர்களை தங்கள் பெயருடன் இணைத்துள்ளார்கள் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுக்குழு தீர்மானங்களும் வழக்கில் தான் வரும் என அப்போது கோடிட்டு காட்டப்பட்டது. அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை இந்த வாரத்திலேயே முடிக்க விரும்புகிறோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விளக்கம் கேட்காமல் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது ஏன் என எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
யார் யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை கருத்தில் கொள்ளத் தேவையும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
பொதுக்குழு வழக்கு விசாரணையை இந்த வாரத்துக்குள்ளாகவே நிறைவு செய்ய விரும்புகிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜூலை 11ஆம் தேதிக்கு முன்னர் அதிமுகவில் இருந்த நிலையை மீண்டும் ஏற்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதிமுக பொதுக்குழு வழக்கில் அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியத்தை அறிய விரும்புகிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற விசாரணை காரணமாக கட்சிப் பணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் அனைத்தும் ஒரே கோரிக்கையை வலியுறு த்துபவயா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வழக்கு தொடர்ந்தவர்கள் யார் யார் என்னென்ன பொறுப்பு வகிக்கிறார்கள் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விதிகளின்படி ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில் தான் பொதுக்குழு நடத்தப்பட்டது என பழனிச்சாமி தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளை ஒத்திவைத்தனர்.