Homeசெய்திகள்அரசியல்அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

-

 

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (டிச.26) காலை 11.00 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ளது.

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1,500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். இதையடுத்து, தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு முறையாக செய்யவில்லை என தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி நஷ்டம் ஏற்பட்ட நிலையில், நிவாரணம் வழங்கப்படவில்லை என அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்-முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

அதேபோல், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகரைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற மரபுகளை சட்டப்பேரவை தலைவர் கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆவின் பால் விலை, உயர்வு, சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியைக் கொண்டு வர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற களப்பணியாற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

MUST READ