spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஈரோடு, சேலத்தில் அரசு விழா.. முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ!.. கொங்கு மண்டலத்திற்கு டார்கெட்

ஈரோடு, சேலத்தில் அரசு விழா.. முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ!.. கொங்கு மண்டலத்திற்கு டார்கெட்

-

- Advertisement -

கொங்கு மண்டலத்தை குறி வைத்து காய் நகர்த்துகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். ஈரோடு, சேலத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ரோடு ஷோ மூலம் பொதுமக்கள், தொண்டர்களை சந்திக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு எதிர்பார்த்த சீட்கள் கிடைக்கவில்லை என்பதால் 200 சீட்களில் வெல்ல வேண்டும் டார்கெட் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், குறிவைத்து இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

மேட்டூர் அணை நீர் திறப்பு, வேளாண் கண்காட்சி கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சேலம், ஈரோடு வந்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், விவசாயிகளை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இன்று மாலை சேலம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை குறிவைத்து கடந்த வாரம் மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாக கூறும் அரசியல் நோக்கர்கள் அடுத்தகட்டமாக சேலத்தில் தேர்தல் பிரசார பாணியில் ரோடு ஷோ நடத்துகிறார்.

மேட்டூர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.

MUST READ