spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்துண்டு போட்டு காத்திருக்கும் அ.தி.மு.க ...யாருமே சீண்டாத பா.ஜ.க - உதயநிதி விமர்சணம்

துண்டு போட்டு காத்திருக்கும் அ.தி.மு.க …யாருமே சீண்டாத பா.ஜ.க – உதயநிதி விமர்சணம்

-

- Advertisement -

தஞ்சையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, நம்முடைய தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என பேசி இருக்கிறார்.

துண்டு போட்டு காத்திருக்கும் அ.தி.மு.க ...யாருமே சீண்டாத பா.ஜ.க - உதயநிதி விமர்சணம்

we-r-hiring

 

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை காத்தான் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் தமிழக துணை முதலமைச்சர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,

இன்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள். தி.மு.க வை அழிப்பேன் என்று. அதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்கள் அதற்கான பதிலடி கொடுப்பார்கள். தி.மு.க தொண்டர்கள் சந்தோஷமாக – உற்சாகமாக இருக்கின்றார்கள். இந்த உற்சாகம்தான் எதிரணியினருக்கு மிகுந்த எரிச்சலை தருகிறது.  தமிழக முதல்வர் தலைமையில் நாம் பெருகின்ற தொடர் வெற்றி தான் அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலைத் தருகின்றது.

பல்வேறு அணிகளாக பிரிந்து கிடைக்கும் அ.தி.மு.க வும் , யாருமே சீண்டாத பா.ஜ.க வும் எப்படியாவது தி.மு.க வில் ஒரு விரிசல் விழுந்துடாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள். ஆக நாம் நம்முடைய பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் ஒன்றரை வருடங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. தலைவர் 200 தொகுதியில் நாம் வெற்றி பெற வேண்டும் என இலக்கு கொடுத்துள்ளார். இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும்.

2026 இல் கழகம் மீண்டும் ஆட்சி அமைத்து, தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனார், திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைத்தது என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும் அதற்கான உறுதியை இந்த தஞ்சை மண்ணில் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சீமான் அப்டேட் இல்லாத அரசியல்வாதி – மா.சுப்பிரமணியன் பதில்

MUST READ