பன்னீர்செல்வத்துக்கு ஒருபோதும் கட்சியில் இடமில்லை- ஜெயக்குமார்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ஜெயக்குமார், “அதிமுக சரியான பாதையில் செல்வதால்தான் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது. உயர்நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதிமுக என்கிற கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஓபிஎஸ், அவருக்கு ஒருபோதும் கட்சியில் இடமில்லை. உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சிகரமானது, வரவேற்கதக்கது. தீர்ப்பை தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் கொண்டாடுகின்றனர். பாஜக அமமுக-வை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவது ஒரு போதும் நடக்காது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்ந்து அங்கம் வகிக்கிறது” எனக் கூறினார்.