பொள்ளாச்சி சம்பவத்தில் 12 நாட்களுக்கு பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டதை நிரூபிப்பதாக நேற்று சவால் விடுத்த நிலையில் இன்று அதன் ஆதாரங்களை சபாநாயகர் அப்பாவுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமர்பித்துள்ளாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக சட்டப்பேரவையில் பதிலுரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ ‘‘திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருணை உள்ளது. ஆனால் நிதி இல்லை. நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் தான் ஆளுநர் குறியாக இருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் சட்டப் பிறவியில் உரையாற்ற வேண்டும். அபத்தமான காரணங்களை கூறி சட்டமன்றத்தில் உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றார். தமிழ்நாடு வளர்ந்து வருவதை கண்டு அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரிக்க மதுரை திருநெல்வேலி கோயம்புத்தூர் சேலம் திருச்சி சென்னை சுற்றுப்புற பகுதியில் 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். இன்னும் சில நிறைவேற்றப்பட வேண்டும். 3 ஆண்டுகளில் 12,000 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன் பெஞ்சல் புயல் மீட்பு பணிகளுக்கு ₹6,675 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது; ஆனால் இதுவரை எந்த நிதியும் கொடுக்கவில்லை.
டங்ஸ்டன் விவகாரத்தை மீண்டும் மீண்டும் கிளப்பி மதுரை மக்களை குழப்பப் பார்க்கிறார்கள்; நான் முதலமைச்சராக இருக்கும்வரை இந்த திட்டம் வராது.
என்னுடைய சிந்தனையும் செயலும் தமிழ்நாடுதான்… தமிழையும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் சுற்றிச்சுற்றி வருகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் 12 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்து இட்டுள்ளேன். திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் போது சிலருக்கு வயிறு எரிகிறது. திராவிட மாடல் என்றால், சமத்துவம், சமூக நீதி’’ என்று பேசினார்.