ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்தை நாடும் அன்புமணி தரப்பு. அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் குழு இன்று டெல்லி செல்கின்றனர்.பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும் என மின்னஞ்சல் மூலமாக தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் செல்லாது, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என மின்னஞ்சல் மூலமாக அன்புமணி தரப்பும் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில், அன்புமணி தரப்பில் நேரடியாக இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என அன்புமணி அணியின் சமூகநீதிப் பேரவையின் வழக்கறிஞர்கள் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 நாட்களுக்கு முன்பாக செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வழங்க வேண்டும்.

மேலும், தலைவர், பொதுச்செயலாளர் பங்கேற்காத செயற்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனா். செயற்குழு கூட்டும் அதிகாரம் அன்புமணிக்கு மட்டுமே உள்ளது. அதனை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை நாடுகின்றனர்.
தங்கம் விலையில் தொடரும் ஏற்ற,இறக்கம் – இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!