Homeசெய்திகள்அரசியல்சீண்டிய அண்ணாமலை! சீற்றம் கொண்ட பிராமணர் சமூகம்

சீண்டிய அண்ணாமலை! சீற்றம் கொண்ட பிராமணர் சமூகம்

-

சீண்டிய அண்ணாமலை! சீற்றம் கொண்ட பிராமணர் சமூகம்
எஸ்வி சேகர் அண்ணாமலை

பாஜக என்றாலே பிராமணர்கள் கட்சி என்றுதான் ஒரு பொதுப்பார்வை இருக்கிறது . ஆனால் இதை மாற்ற துடிக்கிறார் அண்ணாமலை என்ற விமர்சனமும் இருக்கிறது. அது நல்லதுதானே என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லிவந்தாலும் கூட, பிராமணர்களை அழிக்கும் நோக்கில் அண்ணாமலை செயல்படுவதாகவே பாஜகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் நினைக்கிறார்கள்.

எல்.முருகன் பாஜகவில் தலைமை பொறுப்பில் இருந்தபோது அவரது சாதிக்காரர்களை அதிகம் கொண்டு வந்தார். இப்போது அண்ணாமலை அந்த இடத்திற்கு வந்ததும் அவரின் சாதிக்காரர்களை அதிகம் இழுத்து வருகிறார் என்ற முணு முணுப்பு கட்சிக்குள் இருக்கத்தான் செய்கிறது.

admk

எப்படியோ பாஜகவை பலபடுத்தினால் சரி என்று சிலர் இருக்க, பாஜகவில் பிராமணர்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை குறைத்து வருகிறார். அப்படித்தான் கட்சிக்குள் செல்வாக்காக இருந்த கேடி ராகவனை ஒரு வீடியோ மூலம் காலியாக்கி விட்டார். திருச்சி சூர்யா சிவா -டெய்சி சரண் ஆடியோ விகவாரத்தில் காயத்ரி ரகுராமையும் கட்சியை விட்டே ஓட வைத்துவிட்டார் என்ற குமுறல் இருக்கிறது. இது எஸ்.வி.சேகர் வடிவில் வெடித்திருக்கிறது. இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியிருப்பதற்கு காயத்ரி ரகுராம் பொங்கி எழுந்திருக்கிறார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலம் மிகவும் மோசமானது என்பதை ஒப்புக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, ’’தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக இருக்கிறது . இந்தியாவின் ஊழல்மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு தான் முதலிடம்’’ என்று சொல்லி இருப்பது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. அதைவிடவும் பிராமணர்களை கோபப்படுத்தி இருக்கிறது.

சீண்டிய அண்ணாமலை! சீற்றம் கொண்ட பிராமணர் சமூகம்
காயத்ரி ரகுராம்

’’தமிழகத்தை அவமதிக்கும் ஜோக்கர். தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை அவர் அவமரியாதை செய்த போது இதை நாம் அனைவரும் அறிவோம். அவருக்கு இந்த மண்ணின் மீது மரியாதை இல்லை. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெ.அம்மா இறந்துவிட்டதாலும், அவர் பிராமணராக இருப்பதாலும், எந்த சமூகமும் அவருக்கு ஆதரவளித்து போராடாது. ஜெ.ஜெ.அம்மா வேறு சமூகமாக இருந்தால் அண்ணாமலை அடித்து நொறுக்கப்படுவார். மற்ற கட்சிகள் மீதும், சொந்த பாஜக மக்கள் மீதும் பல ஐடி ரெய்டுகள் மற்றும் இடி நடவடிக்கைகள் உள்ளன. ஆனால் ஒரு கைது கூட இல்லை. ஜெஜெ அம்மா ஒரு பெண் என்பதால், இறந்த உடல் மீது இவ்வளவு தைரியம் உள்ளதா அண்ணாமலைக்கு? அவருக்காக பேச யாரும் இல்லை என்று நினைக்கிறீர்களா? பாஜக உலகின் பணக்கார கட்சி, எப்படி? ஊழல் இல்லாமல்? இதைவிட தமிழ் மண்ணையும் தமிழ்நாட்டின் ஆளுமைப் பெண்ணையும் யாராலும் அவமதிக்க முடியாது. ஜெ.ஜெ. அம்மாவுக்காக பிராமணர்கள் யாரும்
பேசமாட்டார்களா? அண்ணாமலை & கோ எவ்வளவு ஊழல்வாதிகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாம் எதிரியை நம்பலாம் ஆனால் துரோகியை நம்ப
முடியாது. பிராமண சமூகத்திற்கும் கூட்டணிக் கட்சிக்கும் துரோகம் செய்பவர் அண்ணாமலை’’என்று வெடித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

அடுத்து எஸ்.வி.சேகர் வாயைத்திறப்பார். அது அண்ணா மலைக்கு எதிரான அதிர்வேட்டாக இருக்கும் என்கிறது பாஜகவில் இருக்கும் பிராமணர் வட்டாரம்.

MUST READ