Homeசெய்திகள்அரசியல்வச்சகுறி தப்பாது... அண்ணாமலை அவுட்..! முள்ளை முள்ளால் எடுக்கும் பாஜக..!

வச்சகுறி தப்பாது… அண்ணாமலை அவுட்..! முள்ளை முள்ளால் எடுக்கும் பாஜக..!

-

- Advertisement -

சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, புதிய தலைவரை தேர்வு செய்கிறது பாஜக தலைமை தலைமை. போட்டியில் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், ஏப்.9ம் தேதி புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வருமென தகவல் அண்ணாமலைக்கு மாற்று பதவி வழங்குவது குறித்தும் கட்சி மேலிடம் பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது  - அண்ணாமலை கண்டனம்

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ”3 வருடங்களுக்கு ஒருமுறை மாநிலத் தலைவரை மாற்றுவது என்பது பாஜக-வில் வழக்கமான நடைமுறைதான். அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு தரவேண்டும் என்பதை தேசிய தலைவர்கள் முடிவுசெய்வர். அந்த முடிவை அறிய நாங்களும் ஆவலோடு, ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்” என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கும் நிலையில் பாஜகவை உதறி இருந்த அதிமுக மீண்டும் பழைய நட்பில் ஒட்டிக் கொண்டுள்ளது. இதற்காக டெல்லிக்கு விசிட் அடித்த எடப்பாடி பழனிசாமி அமித் ஷா சந்தித்துப் பேசினார். சிறிது காலம் எலியும், பூனையுமாக இருந்த தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் புகையாமல் இருக்குமா? அது தான் தற்போது அரசியல் பரபரப்பை கூட்டியிருக்கிறது.

பள்ளிக் குழந்தைகளுக்கு 'அமரன்' படத்தை போட்டுக்காட்ட முதல்வரிடம் கோரிக்கை வைத்த வானதி சீனிவாசன்!

எடப்பாடி பழனிசாமி தனது சந்திப்பின் போது அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து கழற்றினால் தான் கூட்டணி என நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது. அதனால்தான் ஏற்கெனவே இருந்த கூட்டணி சிதறிப் போனதாக தனது வாதத்தையும் எடப்பாடி பழனிசாமி முன் வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவின் தமிழக தலைவர் பதவிக்கு யார் என குடுமிப்பிடி சண்டை தொடங்கியிருக்கிறது. இதற்காக திருநெல்வேலி எம்எல்ஏ, நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், தற்போதைய பெண் எம்எல்ஏ வானதி சீனிவாசன் எனப் பட்டியல் நீள்கிறது.

nainar nagendran

தேர்தல் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், அதிமுக கட்சியை அனுசரித்துப் போக நயினார் நாகேந்திரன் தான் சரியான ஆள் என டெல்லி மேலிடம் கருதுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அவர் அதிமுகவில் இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் பாஜகவில் இணைந்து எம்எல்ஏ ஆனார். தற்போது சட்டமன்ற கட்சித் தலைவரும் அவர்தான். அவருக்கு அதிமுக தலைவர்களின் நாடித்துடிப்பு தெரியும். அனுசரித்துப் போவார் என்று பாஜக தலைமை நம்புவதாகக் கூறப்படுகிறது.

MUST READ